வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (19:35 IST)

மாளவிகா மோகனனை குளிரவைத்த விஜய் ரசிகர்: டுவிட்டரில் ஆச்சரியம்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஊரடங்கின்போது ‘மாஸ்டர்’ படக்குழுவினர் என்ன செய்வார்கள் என்பதை விஜய் ரசிகர் ஒருவர் கற்பனையாக ஒரு கார்ட்டூனை வரைந்திருந்தார். இந்த கார்ட்டூனில் விஜய் உள்பட அனைவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தது போதும் மாளவிகா மோகனன் மட்டும் சமையல் செய்வது போன்றும் இருந்தது. இந்த கார்ட்டூனை பார்த்த மாளவிகா மோகனன், ‘பெண்கள் என்றாலே சமையல் செய்வது மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
 
மாளவிகாவின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். சின்னச்சின்ன வேடங்களில் நடித்த நடிகையை தளபதி படத்திற்கு ஜோடியாக நடிக்க வைத்தால் இன்னும் பேசுவாய், மேலும் பேசுவாய் என்ற ரீதியில் விமர்சனங்கள் பதிவாகின. இதனையடுத்து மாளவிகா தனது டுவிட்டை டெலிட் செய்துவிட்டார்.
 
இந்த நிலையில் மாளவிகா மோகனனை குளிரவைக்கும் வகையில் விஜய் ரசிகர் ஒருவர் தற்போது ஒரு கார்ட்டூனை பதிவு செய்துள்ளார். அதில் மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதிலாக புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த கார்ட்டூனை பார்த்த மாளவிகா மோகனன், ‘இந்த வெர்ஷனை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் நான் புத்தகம் அதிகம் படிப்பேன் என்று எப்படி தெரிந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாளவிகா மோகனனின் இந்த டுவிட்டிற்கு விஜய் ரசிகர்கள் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.