ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (17:42 IST)

ஜிஎஸ்டி வரி விதிப்பு: உலக நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிக வரி வசூல்!!

ஒரே தேசம், ஒரே வரி என்ற குறிக்கோளுடன் ஜுலை 1 முதல் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 


 
 
உலகில் உள்ள ஜிஎஸ்டி அறிமுகம் படுத்தப்பட்ட மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் ஜிஎஸ்டி வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
 
# உலகிலேயே ஜிஎஸ்டி வரி முறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் தான். 1954 ஆம் ஆண்டு பிரான்ஸில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் 20 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 
 
# பிரேசில் நாட்டில் ஜிஎஸ்டி 4 % முதல் 25 % வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. 
 
# கனடா நாட்டில் ஜிஎஸ்டி 13 % முதல் 15 % வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. 
 
# நியூசிலாந்து நாட்டில் 1986 ஆம் ஆண்டு 10 % வரியுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 1989 ஆம் ஆண்டில் 12.5 %, 2010 ஆம் ஆண்டில் 15 % வரி உயர்த்தப்பட்டது.
 
# ஜப்பானில் 1989 ஆம் ஆண்டு 3 % அளவுடன் நுகர்வோர் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 1997-ல் இந்த அளவு 5 % உயர்த்தப்பட்டது. 
 
# ஆஸ்திரேலியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு 10 % வரியுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
# சிங்கப்பூரில் 1994 ஆம் ஆண்டில் 7 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.
 
# 2015 ஆம் ஆண்டில் மலேசியாவில் ஜிஎஸ்டி அறிமுகமானது. 6 % ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் ஜிஎஸ்டி வரி இந்தியாவில்தான் அதிகம் என்ற குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.