1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Gold rate decreases in Chennai

குறைந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

தங்கம்
கடந்த வாரம் ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் அதற்கு அடுத்த வாரம் ஏற்றத்தை கண்ட நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.37,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.4,649-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash