ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (10:20 IST)

ஆன்லைனில் பாஸ்போர்ட்: எளிய வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!!

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தெரிந்துகொள்ள வேண்டிய எளிமையான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...


 
 
பாஸ்போர்ட் சேவா ஆன்லைன்:
 
1. பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் வழியாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். 
 
https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/user/RegistrationBaseAction?request_locale=en ரிஜிஸ்டர் செய்ய இந்த இணைப்பை பயன்படுத்தவும்.
 
2. உள்நுழைந்து Apply for Fresh Passport / Re-issue of Passport என்பதை கிளிக் செய்யவும். 
 
3. பின்னர் படிவத்தில் கேட்கப்படும் மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பி படிவத்தை சமர்ப்பிக்கவும்.
 
4. திரையில் தோன்றும் View saved / Submit Application என்பதை கிளிக் செய்து Pay and Schedule Appointment என்ற தேர்வை நிகழ்த்தவும்.
 
5. பாஸ்போர்ட் அலுவலகங்களில் முன்பதிவு கட்டணம் என்பது கட்டாயம் என்பதால் ஆன்லைன் பேமெண்ட் நிகழ்த்த  ஏதாவதுவொரு முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி பேமெண்ட் நிகழ்த்தவும். 
 
6. பின்னர், Application Reference Number / Appointment Number ஆகிய விவரங்களை பெற Print Application Recipt என்பதை கிளிக் செய்யவும்.
 
7. மேலும் வழக்கில் ஒரு விண்ணப்பதாரர் ஆன்லைன் படிவம் சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் பாஸ்போர்ட் சேவா கேந்திரா செல்லவில்லை என்றால் விண்ணப்பபடிவத்தை மறுமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.