1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (21:29 IST)

ரெட்மி ஸ்மார்ட்போன்களில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட MIUI 9; முழு விவரம்!!

சீன நிறுவனமான சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட MIUI 9 கஸ்டம் ஆண்ட்ராய்டு ராம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


 
 
MIUI 9 ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்து இயங்கும். இண்டர்ஃபேஸ், இமேஜ் சர்ச், ஸ்மார்ட் அசிஸ்டண்ட் மற்றும் ஸ்மார்ட் ஆப் லான்ச்சர் என முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 
 
சீனாவில் ஆகஸ்டு 11 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சீனாவில் சியோமி எம்ஐ 6 எம்ஐ 5X மற்றும் ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போன்களில் MIUI 9 வழங்கப்பட இருக்கிறது. 
 
இமேஜ் சர்ச்: 
 
இமேஜ் சர்ச், முக்கிய குறியீடுகளை டைப் செய்து புகைப்படங்களை தேட வழி செய்கிறது.  
 
ஸ்மார்ட் அசிஸ்டண்ட்: 

ஸ்மார்ட் அசிஸ்டண்ட் ஸ்மார்ட்போனில் உள்ள  தரவுகளையும் மிக எளிமையாக தேட வழி செய்கிறது. 
 
ஹோம் ஸ்கிரீனில் வலது புறத்தில் ஸ்வைப் செய்தால் செயலி, செய்திகள் மற்றும் கஸ்டமைஸ் செய்யக் கூடிய விட்ஜெட் காணப்படும்.
 
ஸ்மார்ட் ஆப் லான்ச்சர்: 
 
ஸ்மார்ட் லான்ச்சர் அம்சம் திரையில் உள்ள தரவுகளுக்கு ஏற்ப செயலிகள் இயங்க பரிந்துரை செய்யும்.