வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (10:36 IST)

நோக்கியா வாடிக்கையாளர்களுக்கு வோடோபோனின் இலவச டேட்டா!!

நோக்கியா அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வோடோபோன் நிறுவனம் கூடுதல் இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.


 
 
இந்த சலுகையை நோக்கியா மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் இணைந்து அறிவித்துள்ள. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 4 ஜிபி அளவு கூடுதல் டேட்டா வழங்கப்படும். 
 
நோக்கியா 6 வாங்குவோருக்கு 9 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களுக்கு 4ஜி அல்லது 3ஜி ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. 3ஜி சேவையில்லாத வட்டாரங்களில் 2ஜி டேட்டா வழங்கப்படும்.