வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (14:55 IST)

கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்ற உதவும் டிடி!!

கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு அதிக மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது. 


 
 
கருப்புப் பணத்தை வெள்ளையாக்க மாற்ற பெங்களூர் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது. 
 
பெங்களுரில் உள்ள பசவனகுடி செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையை சிபிஐ கண்காணித்து வந்துள்ளது. அப்போது ஓம்கார் பரிமல் மந்திர் என்ற நிறுவனத்தின் தலைவர் கோபால் மற்றும் அவரது மகன் அஷ்வின் சுன்கு இருவரும் சேர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்தி 70 லட்சம் ரூபாய்க்கு 149 டிமாண்ட் ட்ராப்ட்டுகள் பெற்றுள்ளனர்.
 
இந்த டிமாண்ட் டிராப்ட்டுகள் அனைத்தையும் பாலாஜி ஃபினான்ஸ் என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருந்தது, பின்னர் இரண்டு நாட்களில் அதனை ரத்து செய்து புதிய ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக 15 மற்றும் 18 நவம்பர் தேதிகளில் பெற்றுள்ளனர்.
 
வங்கி கிளையின் மூத்த நிர்வாகி லக்‌ஷ்மி நாயானன் மற்றும் கோப்பால், சுன்கு மூவரையும் சிபிஐ கைது செய்து விசாரித்து வருகின்றது.