திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:03 IST)

ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி: தீபாவளிக்கு மாஸ் காட்டும் கார் நிறுவனங்கள்!!

தீபாவளியை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் தங்களது விற்பனை உயர்த்திக்கொள்ள பல சலுகைகளை வழங்குவது வழக்கமான ஒன்றுதான். 


 
 
அந்த வலையில் பிரபல் கார் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. இந்த ஆண்டு கார் விற்பனையையில் எக்சேஞ்ச் வசதியுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாருதி கார் நிறுவன சலுகை பட்டியல்: 
 
# ஆல்டோ 800 மாடல் காருக்கு ரூ.30,000, 
# செலேரியோ மாடல் காருக்கு ரூ.25,000,
# வேகன் ஆர் மாடல் காருக்கு ரூ. 30,000 முதல் ரூ.35,000 வரை,
# ஸ்விஃப்ட் மாடல் காருக்கு ரூ.10,000 வரை,
# சியாஸ் மாடலுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 
# இந்த கார்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.45,000 வரை எக்சேஞ்ச் வசதி வழங்கியுள்ளது.
 
ஹூண்டாய் கார் நிறுவன சலுகை பட்டியல்:
 
# இயான் மாடல் காருக்கு ரூ.45,000,
# கிரேன்ட் ஐ10 மாடல் காருக்கு ரூ.20,000,
# எலைட் ஐ.20 மற்றும் ஐ.20 ஆக்டிவ் மாடலுக்கு 15,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 
# ரூ.5000 முதல் ரூ.50,000 வரை எக்சேஞ் வசதி அறிவித்துள்ளது. 
 
ஹோண்டா கார் நிறுவன சலுகை பட்டியல்:
 
# பிரியோ மாடல் காருக்கு ரூ.15,000, 
# ஜாஸ் மாடலுக்கு 10,000 ரூபாயும் தள்ளுபடி அறிவித்துள்ளது.
 
டாடா கார் நிறுவன சலுகை பட்டியல்:
 
# நானோ மாடல் காருக்கு ரூ.15,000, 
# போல்ட் மாடல் காருக்கு ரூ.20,000, 
# ஜெஸ்ட் மாடல் காருக்கு ரூ.15,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. 
# இந்த நிறுவனம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை எக்சேஞ்ச் வசதி அறிவித்துள்ளது. 
 
மஹிந்த்ரா கார் நிறுவன சலுகை பட்டியல்:
 
# கே.யூ.வி. 100 மாடல் காருக்கு ரூ.40,000, 
# டி.யூ.வி. 300 மாடல் காருக்கு ரூ.20,000, 
# ஸ்கார்பியோ மாடல் காருக்கு ரூ. 35,000
# எக்ஸ்.யூ.வி. 500 மாடல் காருக்கு ரூ.40,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. 
# இந்த நிறுவனம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையிலும் எக்சேஞ்ச் வசதி அறிவித்துள்ளது.