திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (14:11 IST)

ஹைபிரிட் கார்: ஹோண்டாவின் யுக்தி!!

ஹோண்டா ஆட்டோமொபைல் நிறுவனம் ஹைபிரிட் கார்களை தயாரிக்கவுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளது. தற்போது ஆட்டோமொபைல் துறையில் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஹோண்டா இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. 
 
ஆட்டோமொபைல் சந்தையில், பின் தங்கி விடுவோமோ என்ற  அச்சத்தில் ஹோண்டா நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
 
ஒரு ஆண்டுக்கு 2 புதிய மாடல் கார் என்ற வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 மாடல் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஹோண்டா நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் பின் தங்கி விட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.  
 
இந்த கேள்விக்கு, இந்திய சந்தையில் விலை மிக முக்கிய காரணியாக திகழ்கிறது. அந்த வரிசையில் பேட்டரி கார்கள் மீதான ஜிஎஸ்டி அதிகமாக உள்ளது. எனவே, இது குறித்த வர்த்தக ரீதியாக பல ஆலோசனைகள் நடைபெற்று பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதோடு, ஹைபிரிட் கார் தயாரிப்பிலும் ஹோண்டா ஆர்வம் காட்டி வருகிறதாம். ஹைபிரிட் கார் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும். ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருகிறதாம். 
 
அரசு பேட்டரி வாகனங்களுக்கு அதிக சலுகை அளித்தால், பேட்டரி வாகன தயாரிப்பு அதிகரிக்கும் என ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.