திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (16:40 IST)

ரூ.7000 விலை குறைந்த அசுஸ் ஸ்மார்ட்போன்(ஸ்)!!

அசுஸ் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
அசுஸ் நிறுவனம் இந்தியாவில்  6இசட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மற்றும் 5இசட் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட விலை விவரம் பின்வருமாறு, 
 
1. ரூ. 31,999 -க்கு அறிமுகம் செய்யப்பட்ட 6இசட் பேஸ் மாடல் ஸ்மார்ட்போன் ரூ. 4000 விலை குறைக்கப்பட்டு ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
2. அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 30,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
3. அசுஸ் 6இசட் டாப் எண்ட் மாடலான 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 5000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
4. அசுஸ் 5இசட் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
5. அசுஸ் 5இசட் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ராம், 128 ஜிபி மாடல் ரூ. 6000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
6. அசுஸ் 5இசட் ஸ்மார்ட்போன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.