தொடர்புடைய செய்திகள்
- வங்கிகளுக்கு வரிச்சலுகை உண்டு; ஆனா உங்களுக்கு கிடையாது! – அதிர்ச்சியில் கடன் நிறுவனங்கள்!
- அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் அந்த 19 ஆயிரத்தை கவனித்தீர்களா? - ட்விட்டர் டிரெண்டிங்
- ஒரு ஆண்டில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை! – டாடாவுக்கு டாட்டா சொன்ன நானோ!
- குறைந்தது வட்டி; சரிந்தது பங்குச்சந்தை: வளர்ச்சி மதிப்பீடு எதிரொலி!
- தொழிலில் நஷ்டம் : மாடியில் இருந்து கீழே குதித்த தொழிலதிபர் ! பரவலாகும் வீடியோ
6 நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை: அதிரடி காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்!
கடந்த வாரம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நடத்திய விழாக்கால விற்பனையில் 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி) அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ரெட்ஷீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை விழாக்கால சிறப்பு விற்பனையை நடத்தின. இதில் கிட்டத்தட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்திருக்கின்றனர். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கஸ்டமர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். புதிய ரக மொபைல்கள் விற்பனை, அதிரடி ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் என 6 நாட்கள் விற்பனை கோலாகலமாக நடந்தது.
ஸ்னாப்டீல் உள்ளிட்ட மேலும் சில ஆன்லைன் நிறுவனங்களும் விற்பனை நடத்தியிருந்தாலும் 95 சதவீத விற்பனையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் செய்துள்ளன. இதன்மூலம் 3 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட விழாக்கால விற்பனையில் மேலும் 3 பில்லியன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
