புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:04 IST)

ஜியோவுக்கு இணையாக இலவசங்களை வாரி வழங்கும் ஏர்டெல்!!

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த சலுகைகளை போல ஏர்டெல்லும் சில சலுகைகளை வழங்க உள்ளது. 
 
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோ ஜிகாஃபைபர் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் மற்ற நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் களமிறங்கியுள்ளது. 
 
ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் மொபைல் சந்தா, ஹோம் பிராட்பேண்ட் மற்றும் டி.டி.எச் போன்ற சேவைகளுக்கான ஒருங்கிணைந்த பில்லிங் திட்டத்தை ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் சண்டிகரில் சோதித்து வருகிறது. 
மேலும், ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு இலவச ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸையும், அதன் பிரீமியம் திட்டங்களின் சந்தாதாரர்களுக்கு எச்டி எல்இடி டிவியையும் இலவசமாக வழங்கக்கூடும் என தெரிகிறது. 
 
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.