மேற்கு வங்காளத்தை தொடர்ந்து கேரளாவை தாக்கிய கால்பந்து காய்ச்சல்
கேரளாவை சேர்ந்த கால்பந்து போட்டி ரசிகர் ஒருவர் தனது வீட்டை பிரேசில் தேசியக்கொடி வண்ணத்திற்கு மாற்றியுள்ளார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்தியாவில் கிரிக்கெட் பேமஸ்சோ, கால்பந்து போட்டிகளுக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது. பலர் இந்த போட்டிக்கு பயங்கர அடிமையாய் உள்ளனர்.
இதனை நிரூபிக்கும் வகையில் கொல்கத்தாவை சேர்ந்த டீக்கடை வியாபாரி ஷிப் ஷங்கர் பத்ரா, கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகர். இதனை நிரூபிக்கும் வகையில் தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா வீரர்கள் அணியும் ஜெர்சியின் கலரை வண்ணமாக பூசி, தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றியிருந்தார்.
அதேபோல் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர், கால்பந்து போட்டியில் பிரேசில் அணியின் தீவிர ரசிகர். இதனால் அவரது வீட்டை பிரேசில் நாட்டின் தேசியக் கொடி வண்ணத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும் தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரில் பிரேசில் அணி வீரர்களின் புகைப்படங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை கால்பந்து முதல் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதிஅரபியாவை ரஷ்யா வீழ்த்தியது.