வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala

விநாயகரின் அறுபடை வீடுகளும் அதன் சிறப்புகளும்...!!

விநாயகரின் அறுபடை வீடுகள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல சிறப்பு வாய்ந்த வழிபாட்டிடங்கள் ஆகும். எங்கும் எளிதில் எழுந்தருள்பவரும், முதல்  கடவுளும் ஆகிய விநாயகப்பெருமானை இவ்விடங்களில் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

விநாயகரின் அறுபடை வீடுகள்:
 
1. திருவண்ணாமலை - அல்லல் போக்கும் விநாயகர்: திருவண்ணாமலை விநாயகரின் முதல்படை வீடாகக் கருதப்படுகிறது. இவ்விநாயகரைப் பற்றியே அவ்வையார்  அல்லல் போம் வல்வினைப்போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைப்போம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.
 
2. திருமுதுகுன்றம் - ஆழத்து விநாயகர்: திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் ஆழத்து விநாயகர் அருள் புரிகிறார். இவர் நுழைவுவாயிலைக்  கடந்து உள்ளே சென்றவுடன் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
 
3. திருக்கடவூர் - கள்ள வாரண விநாயகர்: மூன்றாம் படைவீடான திருக்கடவூரில் இவர் கள்ள வாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை  விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார்.
 
4. மதுரை காரிய சித்தி விநாயகர்: மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுள்ள காரிய சித்தி விநாயகர் நான்காம் படைவீடு விநாயகராக வணங்கப்படுகிறார்.  அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் உள்ளார்.
 
5. பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர்: ஐந்தாம் படைவீடு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலாகும். இரு கரங்களுடன் உள்ள இவர் சிவலிங்கத்தைக் வலகையில் தாங்கி சிவ பூஜை செய்யும் நிலையில் உள்ளார்.
 
6. திருநரையூர் - பொள்ளாப் பிள்ளையார்: கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே உள்ள திருநரையூரிலுள்ள பொள்ளாப் பிள்ளையாரே ஆறாம் படைவீட்டின் அதிபதி ஆவார். சிற்பின் உளியால் பொள்ளப்படாமல் (செதுக்கப்படாமல்) சுயம்புவாக தோன்றியதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.