செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா...?

தை திருநாள் அன்று பொங்கல் செய்ய பானை வைக்கும் நேரமும் பொங்கும் நேரமும் நல்ல யோக முடைய நேரங்களாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை.


பொங்கள் திருநாள் அன்று காலம் முழுவதும் நமக்கு உணவும் திறனும் வழங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவது நம்  மரபாகும். 
 
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14:1:2021 அன்று வியாழக்கிழமை வருகின்றது. பொங்கல் வைக்க உகந்த நேரம் எப்போது என்று தெரிந்துக்கொள்வோம்.
 
காப்பு கட்ட: மார்கழி 29 - 13:01:2021 புதன்கிழமை காலை 9:00 முதல் 10:30 வரை உகந்த நேரம் ஆகும்.
 
பொங்கல் வைக்க நல்ல நேரம்: பொங்கல் திருநாள் 14:1:2021 அன்று வியாழக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையிலும் மற்றும் 10:30 - 12:00 மணி வரையிலும்  பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.
 
மாட்டுப் பொங்கல் அன்று பூஜை செய்ய நல்ல நேரம்: தை 02 - 15:01:2021 வெள்ளிக்கிழமை காலை 9:00 - 10:30 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த  நேரமாகும்.
 
கனுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்: தை 03 - 16:01:2021 சனிக்கிழமை 7:30 - 9:00 வரையிலும் மற்றும் 10:30 - 12:00 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.