10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு

Ashok| Last Updated: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:56 IST)
செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள பணிமனை, பண்டக உதவியாளர் அகிய பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 பணிமனை உதவியாளர், 1 பண்டக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பத்துடன், கல்வி, ஜாதி, அனுபவம் போன்ற சான்றிதழ்களின் நகல்களை, வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுமார் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி அலுவலர், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :