வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Modified: ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (19:31 IST)

கல்லூரி பேராசியர்களுக்கான நெட் தேர்வு: 10 லட்சம் பேர் எழுதினர்

கல்லூரி பேராசிரியர்களுக்கான நெட் தகுதித் தேர்வு இந்தியா முழுவதும் 89 மையங்களில் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.



 

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சிபிஎஸ்இ சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. தற்போது இரண்டவது முறையாக இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
 
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 24 மையங்களில் 12 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 3 தாள்களை கொண்ட நெட் தேர்வு, காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 1.30 மணி முதல் 4 மணி வரை என இரண்டு பகுதியாக நடைபெற்றது.