ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Updated : புதன், 27 நவம்பர் 2019 (12:50 IST)

தமிழ்நாடு குரூப் 1,2 மனிதநேயம் இலவச பயிற்சி

2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குரூப்-1 முதல் கட்டத் தேர்விற்கும், குரூப்-2 எழுத்துத் தேர்விற்கும் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சைதை சா.துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கல்வியகம் விடுத்துள்ள அறிக்கையில், “மேற்குறிப்பிடப்பட்ட தேர்வில் பங்கு பெற விரும்புகின்ற மாணவர்கள், ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து www.saidais.com என்ற இணைய தள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களை நிறைவு செய்து பதிவு செய்துகொள்ளலாம். நேரில் வருவதோ, கடிதத்தின் வாயிலாக விருப்பத்தை தெரிவிப்பதோ, தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்வதோ தவிர்க்கப்பட வேண்டும். இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

ஏற்கனவே குரூப்-1, குரூப்-2 தேர்வில் நேர்முகத் தேர்வு வரை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும” என மாநில தேர்வு ஒருஙகிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.

2007இல் இருந்து இதுவரையில் நடந்த தமிழக அரசின் மாநில தேர்வாணையம் நடத்திய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் மனிதநேய பயிற்சி மையம் 595 மாணவ, மாணவியர்களை வெற்றி பெற வைத்துள்ளது. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றில் 85 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.