தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறை

Webdunia| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:57 IST)
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
FILE

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் தமிழக இணைத் தலைமை தேர்தல் அதிகாரி அஜய் யாதவ் சனிக்கிழமை கூறியதாவது:-

நடத்தை விதிகள் மீறல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்பட தேர்தல் தொடர்பான அனைத்து புகார் களையும் பொதுமக்கள் தெரி விக்க வசதியாக மாநில அளவில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் சராசரியாக 100 முதல் 150 புகார்கள் வருகின்றன. அதிகபட்சமாக 750 புகார்கள்கூட வந்துள்ளன. தற்போது பொது மக்களின் வசதிக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி விவரம்:-


இதில் மேலும் படிக்கவும் :