மோடியின் பெயரை வருண் காந்தி தவிர்ப்பதாக புதிய சர்ச்சை

Geetha priya| Last Updated: சனி, 5 ஏப்ரல் 2014 (13:11 IST)
விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வருண் காந்தி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரின் பெயரை பிரச்சாரத்தின் போது தவிர்த்துவருவதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுபவர் வருண் காந்தி. இவர் அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது
அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடியின் பெயரை உச்சரிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சகோதரர் சஞ்சய்காந்தியின் மகனான இவர், சில நாட்களுக்கு முன் அமேதி தொகுதியில் ராகுல் சிறந்த முறையில் வளர்ச்சி பணியில் ஈடுபட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சர்ச்சை தணியும் முன், இவர் அவரது பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயரை தவிர்த்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :