உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

Muthukumar| Last Updated: சனி, 19 ஏப்ரல் 2014 (12:00 IST)
நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று கொண்டிருக்கும் வேளையில்,
வெளியில் தனிக்கட்சியாக அதிக இடங்களில் நாங்களே வெல்வோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வந்தாலும் உட்கட்சித் தலைகள் வேறு விதமாக நினைக்கிறதாம்.

குறைந்த பட்சம் 120 இடங்களையாவது வெல்லவேண்டும் என்ற அடிப்படையில்தான் இப்போது வேலை நடந்து வருகிறதாம், அதற்கேற்றவாறான தொகுதிகளில்தான் கட்சித் தலைமை மும்முரம் காட்டி வருவதாக வட இந்திய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
முதல் 5 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 534 தொகுதிகளில் இன்னும் 311 தொகுதிகளுக்கான தேர்தல்கள் மீதமுள்ளன. இவை ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி மே 12 முடிவடைகிறது.

அதிகாரபூர்வமாக வெளியில் சிங்கிள் மெஜாரிட்டி தங்கள் கட்சிதான் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் குறைந்தது 120 சீட்களை வெல்வதே முக்கியம் என்று இப்போது கட்சி கருதுகிறதாம்.


இதில் மேலும் படிக்கவும் :