வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

சர்க்கரை நோயாளிகள் உணவில் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஏன்...?

கேழ்வரகு உடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது. மிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு.

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவும். 
 
கேழ்வரகில் உள்ள இயற்கை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றது. இது சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
 
கேழ்வரகில் வலைன், ஐசோலியோசின், டிரையோனைன், லியோசின், மீத்தையோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் வலைன் அமினோ அமிலம் திசுக்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது.
 
ஐசோலியோசின் அமிலமானது ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
டிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருட்களை வளப்படுத்தப்படுகின்றன. மேலும் கல்லீரலில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் பாதுகாக்கின்றன.
 
மீத்தையோனைன் அமினோ அமிலம் சருமம் மற்றும் ரோமங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது. லிசித்தின் என்ற திரவத்தை சுரக்க உதவுகிறது. இது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.
 
கேழ்வரகில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சரி செய்வதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் சமநிலை ஏற்பட உதவும்.