புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூலிகை மருத்துவத்தில் அற்புத நன்மைகள் தரும் தவசி முருங்கை!!

தவசி முருங்கை மூலிகை மருத்துவத்திலும், உணவுத் தயாரிப்பிலும், பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். 
இதன் இலை முருங்கையிலை போலவே இருந்தாலும் இது சிறு குத்துச்செடியாக வளரும். இது சாதாரணமாக அனைத்து மண்ணிலும் வளரும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படுகிறது. இது பத்திய உணவாக  சேர்த்துக்கொள்ளப்படுகிறது. 
 
தவசி முருங்கைக்கு மூக்குத்த பூண்டு என்ற பெயருண்டு. இது குழந்தைகளுக்கு வரும் மாந்தம், தோஷம், வயிற்றுப்பிசம், பொருமல்,  செரியாமை, வயிற்றில் ஏற்படும் ஒருவகை வலி ஆகியவற்றைப் போக்கும் குணமுடையது. இதன் இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கில்  நீர்வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.
 
தவசி முருங்கையிலை, ஒரு பிடியுடன் கொஞ்சம் உப்பையும், மிளகையும் சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேனும், சேர்த்து ஒரு தேக்கரண்டி வீதம் இருவேளை கொடுத்தால் வயிற்றுப்பிசம் உடனே தணியும். 
 
ஜூரத்தால் கபம் கட்டி மூச்சுத்திணறி ஆயாசப்படும்போது தவசி முருங்கை இலையை அரைத்து சாறு பிழிந்து கொஞ்சம் துளசிச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் சற்று நேரத்தில் கபம் கரைந்து மூச்சு தாராளமாய் விடமுடியும் காய்ச்சல் குணமடையும்.
 
தவசு முருங்கையின் தழையை பறித்து கீரை போல் சமைத்து சாப்பிடலாம். இதனால் மூச்சிரைப்பு நோய், இருமல் ஜலதோஷம் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் மாரடைப்பு ஏற்படும் நேரத்தில் இதனை சாறு பிழிந்து 10 சொட்டுகள் வலது மூக்கிலும், 10 சொட்டுகள் இடது  மூக்கிலும் விடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
 
வெட்டுக்காயம் மற்றும் புண்களின் மீது இந்த இலையை கசக்கி வைத்து கட்டு கட்டிவிட்டால் போதும். வெட்டுக்காயம் தானாக ஆறிவிடும். தவசுக்கீரையை அரைத்து சாறுபிழிந்து காலையும் மாலையும் குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் மறையும். பெண்களின் பிரசவத்திற்கு பிறகு  மீதமுள்ள அழுக்குகள் கர்ப்பப்பையை விட்டு நீங்கும்.