செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குணம் தரும் இஞ்சி...!!

இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும் மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. அது மட்டுமில்லாமல் இன்னும் பல மருத்துவ குணங்களையும் உடையது.
இஞ்சி, மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வர ஜீரணம் ஏற்படும். தொப்பை குறைய தினம் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி குடித்து வர தொப்பைக் குறையும்.
 
வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு இஞ்சியை வதக்கி அதனுடன் தேன் கலந்து சிறிது நீர் வீட்டு கொதிக்கவைத்து அந்த நீரை காலை  மாலை குடித்து வர வயிற்று போக்கு குறையும்.
 
இஞ்சியை அரைத்து அதை நீரில் கலந்து தெளிந்த நீருடன் துளசி சாற்றை கலந்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் குடித்து வர வாய்வுத்  தொல்லை நீங்கும். 
 
இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் பசி நன்றாக எடுக்கும். இஞ்சி சாப்பிடுவதால் மலசிக்கல் வரமால் தடுக்கிறது.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும்.
 
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன்  மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும் அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும்.காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம் பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல்  தீரும். உடம்பும் இளமை பெறும்.
 
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை  பெருகும்.இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.