செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By

நீரழிவு நோயினால் எந்தெந்த உறுப்புகள் பாதிப்படையும் தெரியுமா...?

டைப் 1 நீரிழிவு நோய் நமது உடலின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவை இருதய இரத்த குழாய்களில் பாதிப்பு, நரம்புகளில், சிறுநீரகம், கண் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உயர்ந்த இரத்த சர்க்கரை அளவு மிக சிறிய இரத்த குழாய்களை சேதப்படுப்படுத்துகிறது. இதன் மூலமாக உணர்வற்ற நிலை, எரிச்சல் அல்லது  வலி போன்றவை முதலில் கால் பாதங்களில் அல்லது விரல்களின் ஓரங்களில் ஏற்படும். நாளடைவில் அது மேல்புறமாக பரவக்கூடும். 
 
இரத்த சர்க்கரை அளவின் ஒழுங்கற்ற தன்மையினால மூட்டு வரை உணர்வற்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாளடைவில் இரைப்பையில் பாதிப்பை ஏற்படுத்தி உணவு செரிமானம் ஆகாமல் வாந்தி, குமட்டுதல், வயிற்று போக்கு அல்லது மலசிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பு  உள்ளது.
சிறுநீரகங்கள் பல மில்லியன் சிறிய இரத்த நாளங்களை உள்ளடக்கியது. அவை இரத்த கழிவுகளை பிரித்து எடுக்கின்றன. சர்க்கரை நோய்  இந்த இரத்த நாளங்களை தாக்குகிறது. இதுவே சிறுநீரக செயல் இழப்பிற்கு காரணமாகும். இதனால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரகங்களை   மாற்ற கூடிய நிலை ஏற்ப்படுத்தும்.
 
நீரிழிவு நோய் கண் கருவிழியின் இரத்த குழாய்களையும், பார்வை நரம்புகளை பாதிக்கிறது. இதனால் கண் பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள்  ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.
 
நீரிழிவு நோயால் கால்களில் நரம்புகள் பாதிப்பு அடைவதால் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதனால் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காலில் ஏற்படும் காயங்களை கவனிக்க தவறினால் சில நேரங்களில் அவை கால்களையோ அல்லது பாதத்தையோ இழக்க  காரணமாக அமையும். 
 
நீரிழிவு நோயால் தோல்கள் சுலபமாய் பாதிக்கப்படுகின்றன. அதனால் பாக்டீரியா போன்ற தொற்று நோய்களால் எளிதில் தொற்றி கொள்ள  வாய்ப்பு உள்ளது. 
 
சர்க்கரை அளவு உயர்வதால் குழந்தை மற்றும் தாய்க்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் கரு சிதைவு, குறை பிரசவம் போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு அதிகம். மேலும் உயர்த்த இரத்த அழுத்தம் போன்றவையும் ஏற்படலாம்.