தீபாவளிப் பண்டிகையும பட்டாசுத் தொழிலும்….
கொரோனா தொற்று வராததற்கு முன் இயல்பாகவே இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால் சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றால் மக்கள் பெரிதும் பாதிகப்பட்டுள்ளனர். ஆனால் இந்தத் தீபவாளி பண்டிகையின் போது விற்கப்படும் பட்டாசுகளை நம்பி வருடம் தோறும் உழைத்து வரும் குட்டி ஜப்பான் சிவகாசியில் வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தான் இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.
பெருவாரியான பட்டாசுகளை வாங்கி வெடிக்கும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை உத்தரவு வந்துள்ளதால் பட்டாசு தொழிலாளர்களின் உழைப்பை நினைத்தால் கண்களின் கண்ணீர் வருகிறது.
ஆனால் பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்காகவேனும் அம்மாநிலங்களில் உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. வருடத்தி ஒருநாள் பட்டாசு தொட்டாலே மருத்துநாற்றம் போக பத்துமுறை தேய்த்துக் கையைக் கழுவும் நாம் தினமும் அதே மருத்தினிடையே உயிரைப் பணம் வைத்து வேலை செய்வதற்காகவாது குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் தொழிலையும் காப்பாற்றிட வேண்டி நல்ல முடிவு எடுக்க வேண்டுமென்பதுதான் அனைவரது கோரிக்கையாகும்.