வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 மே 2020 (18:31 IST)

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் எப்படிப்பட்டவை?

இந்தியாவின் வட மாநிலங்களில் படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
வெட்டுக்கிளிகள் படையாக உருவாகி பயிர்களைச் சேதப்படுத்தும் ஒரு பூச்சி. இவற்றின் ஆயுட்காலம் 6 முதல் எட்டு வாரங்கள். இதற்குள் மூன்று முறை இவை முட்டையிடுகின்றன. 
அறுவடைக்குத் தயாராக உள்ள வேளாண் பரப்பு எங்குள்ளது என்பதை காற்றின் மூலம் அறிந்து அந்தத் திசையில் இவை படையெடுப்பவை.
 
பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் உருவாகும் இந்த பூச்சிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். 
 
இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உட்கொள்ளும். இது 35,000 மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் உணவுக்குச் சமமாகும்.