வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (16:25 IST)

ரத்த காயங்களை ஏற்படுத்தும் ரயில் நிலைய இருக்கைகள்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள இருக்கைகள் துருபிடித்து ஓட்டைவிழுந்து கத்திபோல் கூர்மையாக உள்ளன.


 

 
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே உள்ள, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட இருக்கைகளில் உள்ள, கைப்பிடிகள் துருபிடித்து, சிதிலமடைந்து, ஓட்டை விழுந்து காணப்படுகின்றன.
 
இருக்கைகளில், தேய்மானம் அடைந்து காணப்படும் கைவைக்கும் பகுதி கத்திபோன்று கூர்மையாக உள்ளது. இதனால், இதை கவனிக்காமல் கைவைக்கும் போது, கைகளில் ரத்தக் காயங்கனை ஏற்படுத்தி விடுகின்றன.


 

 
சில தினங்களுக்கு முன்னர் தனது தாயின் கையைப் பிடித்தபடி நடந்துவந்த ஒரு சிறுமி, இங்கிருந்த இருக்கையின் கைப்பிடியை பிடித்தாள். அப்போது,
 மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

அந்த இருக்கையின் கைப்பிடி சிறுமியின் கையை கிழித்துவிட்டது. உடனே, கையில் இருந்து ரத்தம் வடியத் தொடங்கியது.
 
இதனால் ஏற்பட்ட வலியால் துடிதுடித்த அந்த சிறுமியை, அவரது தாய் கண்களில் நீர் மல்க மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்.


 

 
இது போன்று எத்தனை ரத்தக் காயங்களை இந்த இருக்கைகள் பாத்திருக்கிறதோ தெரியவில்லை. ரயில் நிலையம் என்பதால், ரயிலுக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள், இந்த இருக்கைகளில்தான் அமரவேண்டியுள்ளது.
 
இந்த இருக்கைகளைப் பற்றி அறியாதவர்கள், காயமடைவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில், விஷயமறிந்த சிலர், தங்கள் கைகளில் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக, கைவைக்கும் பகுதிகளில் செய்தித்தாள்களை வைத்து அதற்குமேல் தங்கள் கைகளை வைத்துக் கொள்ளும் காட்சிகளை அடிக்கடி பார்க்க முடிகின்றது.

எனவே இந்த ரயில் நிலையத்தில் உள்ள ஆபத்தை விளைவிக்கும் இருக்கைகளை மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் எதிர்பார்க்கின்றனர்.