திங்கள், 13 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 6 ஜூன் 2016 (18:16 IST)

விராட் கோலி ஒருநாள் அணி கேப்டனா? - பொங்கிய யுவராஜ் சிங்!

விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பதவியேற்பார் என்ற செய்தி உலவுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு யுவராஜ் சிங் கோபமாக பதிலளித்துள்ளார்.
 

 
புதுடெல்லியில், ’ஸ்மைல் ஃபவுண்டேஷன்’ என்று தொண்டு நிறுவனம், வறுமையில் வாடுகின்ற குழந்தைகளை, ஊக்குப்படுத்துவதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி கலந்துகொண்டு விருந்து வைத்தார்.
 
இந்நிகழ்ச்சியில், கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அச்சமயம் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் யுவுராஜ் சிங் கலந்துகொள்ள வருகை புரிந்தார்.
 
அப்போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பதவியேற்க உள்ளதாக செய்தி உலவுகிறதே என்று கேள்வி எழுப்பினர்.
 
அப்போது பொறுமை இழந்த யுவராஜ் சிங், “நான் இங்கே இந்த நிகழ்ச்சியை பற்றி பேசு வந்துள்ளேன். கிரிக்கெட்டைப் பற்றி பேசுவதற்கு இங்கே வரவில்லை. சரியா?” என்று கோபமாக பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார்.