1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 21 பிப்ரவரி 2015 (16:26 IST)

உலகக் கோப்பை: பாகிஸ்தான் கோட்டை விட்ட கேட்சுகள்; 1 ரன்னுக்கு 4 விக்கெட் [வீடியோ]

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
 
முதலில் களமிறங்கி விளையாடிய மேற்கிந்திய அணிகள் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில், ஆன்ரே ரஸ்ஸல் 13 பந்துகளில் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) 42 ரன்கள் எடுத்தார்.

 

பாகிஸ்தான் வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் கொடுத்த சில வாய்ப்புகளை வீணடித்தனர்.

அதன் வீடியோ கீழே:
 

 
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம், 150 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
 
தொடக்க ஆட்டக்காரர்களில் மூன்று வீரர்கள் ‘டக்’ அவுட் ஆகி வெளியேறினர். பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 1 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 
 
அதன் வீடியோ கீழே: