ஏன் அணியில் ரோஹித் ஷர்மா இல்லை?... கேப்டன் பும்ரா அளித்த பதில்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் பும்ரா முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார்.
அதையடுத்து பேட் ஆடவந்த இந்திய அணி உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்களை இழந்து 57 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. விராட் கோலி களத்தில் உள்ளார். இந்த போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரோஹித்ஷர்மா இடம்பெறவில்லை. அவரின் மோசமான ஆட்டத்திறனே அதற்குக் காரணம்.
இந்நிலையில் புதுக் கேப்டன் பும்ரா இது குறித்து டாஸின் போது பேசுகையில் “எங்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதை வைத்தே எங்கள் அணிக்குள் ஒற்றுமை இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக கேப்டன் ரோஹித்துக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.