ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (11:41 IST)

டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்..! ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்..! பிசிசிஐ அறிவிப்பு..!

virat
இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட்  போட்டிகளில் இருந்தும், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன.
 
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

sheroys iyyer
ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்:
 
எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
indian team
3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: 
 
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், ஆர் அஷ்வின்  , ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது.  சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.