புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (15:28 IST)

கோலி ஓப்பனிங் இறங்கணும்… சதத்துக்கு பிறகு எழுந்திருக்கும் கருத்து!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அன்றைய அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் “ஐபிஎல் தொடரிலும், சர்வதேச போட்டிகளிலும் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் போதுதான் சதமடித்துள்ளார்.” என்று பத்திரிக்கையாளர்கள் சொன்ன போது அதற்கு கே எல் ராகுல் சற்று கடுப்போடு பதிலளித்துள்ளார்.

ஆனால் இப்போது முன்னாள் வீரர்கள் பலரும் கோலி ஓப்பனிங் இறங்கி விளையாடுவதை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். கோலி நிதானமாக செட்டில் ஆகி விளையாட டி 20 போட்டிகளில் ஓப்பனிங் இறங்குவதுதான் சிறந்தது என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.