1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat kohli explained about avneeth kaur pics like in insta

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

விராட் கோலி
உலகளவில் தற்போது கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் திடீரென விராட் கோலி இன்ஸ்டாகிராமில் அவ்னீத் கவுர் என்ற நடிகையின் புகைப்படங்களை வரிசையாக ‘லைக்’ செய்துள்ளதாக ஒரு பரபரப்பு உருவானது. இந்த பரபரப்புக்குக் காரணம் அவ்னீத் கவுர் வெளியிட்ட புகைப்படங்கள் கவர்ச்சித் தூக்கலான படங்கள்.

இது புகைச்சலை ஏற்படுத்த விராட் கோலி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் “நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் என்னுடைய கணக்கில் இருந்து சிலவற்றை நீக்கும் போது இன்ஸ்டாகிராம் அல்காரிதம் தவறுதலாக ‘இந்த லைக்குகளை’ இட்டிருக்கும் என நினைக்கிறேன். இதற்குப் பின்னால் எந்த காரணமும் இல்லை. இதன் காரணமாக தேவையில்லாத ஆருடங்கள் எழுவது வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு