வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஜூலை 2023 (08:16 IST)

சதமடித்ததை வித்தியாசமாகக் கொண்டாடிய விராட் கோலி!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வலுவான ஸ்கோரை செட் செய்துள்ளது.

தனது 500 ஆவது போட்டியில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சதமடித்து சாதனை படைத்தார். இந்த போட்டியில் அவர் அடித்தது அவரின் 29 ஆவது சதமாகும்.

இந்நிலையில் இந்த சதத்தை அடித்த பின்னர் ரசிகர்களுக்கும் சக வீரர்களுக்கும் பேட்டை உயர்த்தி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கோலி, பின்னர் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் செய்வது போல தலையை தாழ்த்தி “ஹெட்ஸ் டவுன்” செய்தார். இதைப் பார்த்த சுப்மன் கில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.