செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (03:28 IST)

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வலுப்படுத்தப்படும்: சஷாங்க் மனோகர்

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வலுப்படுத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சஷாங்க் மனோகர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20 ஆம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
 
இதனையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்ய, இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  சிறப்பு பொதுக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
 
ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு ஷசாங் மனோகர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். என்.சீனிவாசன் உள்ளிட்ட மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக போட்டியின்றி ஷசாங் மனோகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 
தேர்வு செய்யப்பட்ட பின்பு, மனோகர் பேசுகையில், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வலுப்படுத்தப்படும் என்றும்,  அனைத்து மாநில கிரிக்கெட் சங்க கணக்குகளை சரிபார்க்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும். ரூ. 25 லட்சத்திற்கு மேல் செலவிடப்படும் செலவு  குறித்து வாரிய இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
 
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாரின் நிழலாக கருதப்படுபவர் சஷாங்க் மனோகர். இவர்  இரண்டு ஆண்டு காலம் இந்தப்பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடதக்கது.