1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 23 பிப்ரவரி 2015 (18:45 IST)

தென் ஆப்பிரிக்கா ரசிகர்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெற்றியை கொண்டாட சொல்லும் வீடியோ

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்தியாவிடன் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா அணி ரசிகர்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் வெற்றியை கொண்டாட சொல்லும் படியான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.

 
நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் முன்னதாக, அந்த ஆட்டம் குறித்த விளம்பர வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு வருகிறது.
 
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டிக்கு முன்னதாக, இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, ‘மோக்கா’ விளம்பர வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
 
பிறகு இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தை முன்வைத்து, உலக கோப்பையில் இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக, இந்திய அணியுடன் வெற்றி பெறாததை வைத்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.
 
தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டியை தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் டிவியில் பார்த்துக் கொண்டுள்ளனர்.
 
ஆனால் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்ததை கண்டதும், பட்டாசை எடுத்து உடைத்துப்போடுகிறார். அப்போது வெளியிலிருந்து அழைப்பு மணி ஒலிக்கிறது. தென் ஆப்பிரிக்கா ரசிகர் அணிந்திருந்த பனியனை கழற்றி எறிந்துவிட்டு வெளியே செல்கிறார்.
 
வெளியே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரசிகர் ஒருவர், தென் ஆப்பிரிக்கா ரசிகரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி-சர்டை அணியும்படி சொல்கிறார். ஐக்கிய அரபு எமிரேட் அணி இந்தியாவை வீழ்த்தினால் பட்டாசை வெடிக்கும்படி அறிவுறுத்தி ‘மோக்கா... மோக்கா..’ சொல்லி செல்கிறார்.
 
விளம்பர வெளியாகி ஒரு நாள்கூட ஆகாத நிலையில், இந்த வீடியோவை இதுவரை சுமார் 5 லட்சத்து 44 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அதன் வீடியோ கீழே: