1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:45 IST)

ஏன் மைதான ஊழியர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்?- சர்ச்சையைக் கிளப்பும் இலங்கை முன்னாள் கேப்டன்!

ஆசியக்கோப்பை இறுதி போட்டி தொடங்கி சில மணிநேரங்களிலேயே இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று  8 ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் முகமது சிராஜ்.

இதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்ற சிராஜ், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையான 4.15 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) பணம் முழுவதையும் கொழும்பு பிரேமதாசா மைதானப் பராமரிப்பாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். அதே போல பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் 40 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்தார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன அர்ஜுனா ரனதுங்கா “இதற்கு முன்னர் இந்திய அணி இலங்கை வந்துள்ளது. அப்போதும் மழை பெய்து, மைதான ஊழியர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஆனால் அப்போதெல்லாம் பணம் கொடுக்காமல், இப்போது மட்டும் ஏன் பணம் கொடுக்க வேண்டும். இதுபற்றி ஊடகங்கள் விசாரிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளது.