வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (07:58 IST)

என்ன ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடுறாங்க… சொதப்பலாக நடந்த இலங்கை vs தென்னாப்பிரிக்கா போட்டி!

டி 20 உலகக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த எந்த வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவில்லை.

இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு பெரிய அணிகள் மோதும் போட்டி நடந்தது. இந்த போட்டி கூட ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்கள் வரை விளையாடி 77 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இப்படி முதல் இன்னிங்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போல நடக்க, இரண்டாவதாக ஆடிய தென்னாப்பிரிக்கா அணியும் இந்த இலக்கை எட்ட போராடியது. இந்த இலக்கை 17 ஆவது ஓவரில்தான் 4 விக்கெட்களை இழந்து எட்டியது.