1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By ashok
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (14:18 IST)

22 ஆண்டுகள் கனவை விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி நிறைவேற்றுமா?

இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் இந்தியா அணி சற்று தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. 15 ஒவரில் 50 ரன் 2 விக்கெட்டை பறி கொடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே ராகுல் வெளியேறினார். பின்னர் நான்காவது ஓவரில் ரஹானே, பிரதீப்பின் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு கோலி - புஜாரா ஜோடி கவனமாக ஆடினார்கள். 15-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது .இந்நிலையில் மழையால் உணவு இடைவெளி என போட்டியின் நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், இரண்டு ஆட்டங்களில் இந்தியா - இலங்கை அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது .கடந்த 1993 ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்தியா அணி இலங்கையில் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பின்னர்.இந்தியா அணி டெஸ்ட் தொடரை இலங்கை மண்ணில் கைப்பற்றியதில்லை .22 ஆண்டுகள் கனவை விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி நிறைவேற்றுமா என்பதற்கான கடைசி டெஸ்ட் இந்த போட்டியாகும். இதனால்.இந்த போட்டியில் வெற்றி பெறுவதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது.

இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர் இடம்பிடித்தார்கள். இலங்கை அணியில் சங்ககாரா, முபாரக், சமீராவுக்குப் பதிலாக பெரேரா, பிரதீப், தரங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.