செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (13:58 IST)

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்! – கோமா நிலைக்கு சென்ற வீரர்!

Mondli Khumalo
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மாண்ட்லி குமாலோ சிலரால் தாக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மாண்ட்லி குமாலோ. கடந்த 2020ம் ஆண்டு நடந்த இளைஞர் உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர் குமாலோ.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்த குமாலோ சமீபத்தில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக இங்கிலாந்திலுள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கிடையே மோதல் எழுந்துள்ளது.

இதில் எதிர்தரப்பினர் குமாலோவை மோசமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குமாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.