வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 மே 2023 (07:57 IST)

திரைப்படங்களில் நடிக்க போகிறாரா சுப்மன் கில்? அவரே அளித்த விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியில் வளரும் நட்சத்திரமாக உருவாகி வருகிறார் சுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

சமீபத்தில் வெளியான் ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் பஞ்சாபி மொழியில் டப்பிங் பேசினார் கில். இதனால் அவர் தொடர்ந்து நடிகராகக் களமிறங்குவாரா என்ற கேள்வி அவரிடமே கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர் “நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஆசை உள்ளது. அதற்காக நடிப்புப் பயிற்சிக்கு செல்ல வேண்டும். நடிப்பு என்பது ஆற்றலை வெளிப்படுத்தும் ஒன்று என்பதால் அதில் எனக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் நான் திரையில் நடிகனாக தோன்றுவேனா என்பது தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.