திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (19:10 IST)

ஐபிஎல் திருவிழாவில் இன்று நம்பர் 1 இடத்துக்கான போட்டி- KKR vs RR டாஸ் அப்டேட்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை அனைத்து அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதன் மூலம் ப்ளே ஆஃப்க்கு செல்லும் அணிகள் எவை என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

கொல்கத்தா அணி விவரம்
பிலிப் சால்ட்(w), சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர்(c), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா

ராஜஸ்தான் அணி விவரம்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்