Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுமை இழந்து வாஷிங்டன் சுந்தரைக் கண்டபடி கத்திய ரோஹித் சர்மா!

Written By vinoth
Updated: திங்கள், 5 டிசம்பர் 2022 (09:01 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் இழந்த நிலையில் திரில் வெற்றி பெற்றது 

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  41.2 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேஎல் ராகுல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 73 ரன்கள் எடுத்தார். கடைசி 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்ததால் இந்திய அணி குறைவான ஸ்கோரை பெற்றது. 

இதனை அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி அவ்வப்போது விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி சீரான ரன்ரேட்டில் உயர்ந்து வந்தது . ஒரு கட்டத்தில் அந்த அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. வெற்றிக்கு  இன்னும் 50 ரன்களுக்கு மேல் தேவை என்பதால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடிய மெஹிந்தி ஹசன் மிராஸ் அபாரமாக விளையாடி இலக்கை எட்டினார்.

கடைசி விக்கெட்டுக்கு இந்திய அணி சார்பாக நிறைய பீல்டிங் கோளாறுகள் நடந்ததால் வெற்றி கைவிட்டுப் போனது. அப்படி பட்ட நிலையில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் கேட்ச் விட்டபோது கேப்டன் ரோஹித் ஷர்மா , தன் பொறுமையை இழந்து கடுமையாக அவரைத் திட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments