செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (07:50 IST)

உங்க பயோபிக்கில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும்… ராகுல் டிராவிட் அளித்த பதில்!

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான்.

இந்நிலையில் டிராவிட்டை தங்கள் ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக்க பல அணிகள் முயற்சி செய்து வருகின்றன. வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் பயோபிக்குகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராகுல் டிராவிட்டிடம் உங்கள் பயோபிக்கை எடுத்தால் அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கபட்டது.

அதற்கு அவர் “சம்பளம் நிறைவாக இருந்தால் நானே நடித்துவிடுகிறேன்” என ஜாலியான பதிலை அளித்துள்ளார். சமீபத்தில் யுவ்ராஜ் சிங்கின் பயோபிக் ‘சிக்ஸ் சிக்ஸர்ஸ்’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.