டிராவிட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்
இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் முடிவடையும் நிலையில், பிசிசிஐ இந்த பதவிற்கு விண்ணபிக்க அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையி இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க கோரி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் ராகுல் டிராவிட்டிடம் உள்ளது. இளம் வீரர்களின் உத்வேகமாக அவர் இருக்கிறார். அவர் மிகவும் கவனமாக செயல்படுவார்.
கிரிக்கெட்டின் 3 நிலைகளையும் டிராவிட் நன்கு அறிந்தவர். டிராவிட்டை போன்று சிறந்தவர் வேறு ஒருவர் இருப்பதாக கிரிக்கெட் வாரியம் கருதும் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சியாளரை முடிவு செய்ய வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியம்தான்.