புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (13:32 IST)

இலங்கை செல்லும் இந்திய அணி; ராகுல் ட்ராவிட்டை அனுப்பிய கங்குலி!

இலங்கையில் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள செல்லும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் அனுப்பப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற உள்ள நிலையில் இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையில் செல்லும் இந்திய அணி மூன்று டி20 ஆட்டங்கள், மூன்று ஒருநாள் போட்டிகளில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில் ஷிகர் தவானின் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அண்டர் 18 அணியின் பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட் இலங்கை செல்ல உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.