திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (12:30 IST)

ரச்சின் ரவீந்தரா சதம்!… வலுவான நிலையில் நியுசிலாந்து!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகி ஏமாற்றினர்.

இதனை அடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகின்றது. இந்திய அணியைப் போல தடுமாறாமல் நியுசிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் நேற்றைய ஆட்டமுடிவில் சேர்த்திருந்தனர்.

இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட்களை இழந்து 352 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியில் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா சிறப்பாக விளையாடி சதமடித்துள்ளார். ஒன்பதாவது வீரராக இறங்கிய டிம் சவுத்தி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.