திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2022 (12:36 IST)

ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த திறமை பிறவியிலயே இருக்கு… பாராட்டி தள்ளிய முன்னாள் ஆஸி வீரர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி பாராட்டி பேசியுள்ளார்.

டெல்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் அடுத்த ஆண்டே கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இதையடுத்து டெல்லி அணி அவரை இந்த ஆண்டுக்கான ஏலத்தில் அவரை விடுவித்தது. இதையடுத்து ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் யாரும் எதிர்பாராத விதமாக கே கே ஆர் அணி 11.5 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. மேலும் அந்த அணிக்குக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கே கே ஆர் அணியில் ஆலோசகரான டேவிட் ஹஸ்ஸி தங்கள் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரைப் பற்றி பேசும் போது ‘ ஸ்ரேயாஸ் ஒரு பார்ன் லீடர்’ எனக் கூறியுள்ளார்.