செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:36 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான 3 வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி

pakistan -newzeland
பாகிஸ்தானுக்கு எதிரான 3 வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதையடுத்து, தற்போது, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில், பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், லாகூரில் நடைபெற்ற 3 வது டி-20 தொடரில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதில், கேப்டன் டாம் 64 ரன்களும், மீட்சே 33 ரன்களும், அடிக்கவே, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 1நத அணி 163 ரன்கள் அடித்து, பாகிஸ்தானுக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், இப்திகார் அகமது (24 பந்துகளில் 60 ரன்கள்), பஹீம் ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர்.

எனவே 20 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது.

இதனால், நியூசிலாந்து அணி 4  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் சார்பில் நீஷம் 4 விக்கெட்டும், ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தற்போது பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.